Saturday, December 6, 2014

சுவையாக வெந்தயக்கீரை ரசம் வைப்பது எப்படி ?

வெந்தயக்கீரை ரசம் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில்... நீங்களும் செய்து பாருங்கள்.
வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது
தேவையானப் பொருட்கள்:-
வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
தக்காளி - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள்தூள், பெருங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.
வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.
மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.
வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது.
----------------------
ரசத்தின் பயன்கள் என்ன ? - வைரமுத்து
மிளகு - சுவை அரும்புகள் தூண்டுவது. புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.
சீரகம் - செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரிசெய்வது. மனிதத் தேவைக்கான மெக்னீஷியம் கொண்டது.
பூண்டு - கிருமிகளின் முதல் எதிரி. கொழுப்புகளை உடைப்பது. பக்கவாதம் தடுப்பது. ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம், கால்சியம், பொட்டாசியம் கொண்டது.
கடுகு - எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது. நல்ல கொழுப்பு உடையது.
மிளகாய் - வைட்டமின் A & C இரண்டும் கொண்டது. ரத்த ஓட்டம் அதிகரிப்பது. ஆண் குறியில் புற்றுநோய் தடுப்பது.
புளி - வயிற்றுக் கோளாறு சரி செய்து, இருதயம் வலிமை செய்வது.
மல்லித் தழை - இரும்புச் சத்து மிக்கது. எலும்புத் தேய்மானம் தடுப்பது.
கறிவேப்பிலை - தோல் தொற்று தடுப்பது. சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது. தாதுக்களும் நார்ச்சத்துக்களும் மிக்கது.
Source : Maalaimalar News Paper & Tvrk site.


Thursday, December 4, 2014

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது சட்னி வகை. இது வரைக்கும் இதை நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க வித்தியாசமா இருக்கும். சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்.
இட்லி, தோசைக்கு எத்தனை நாள் தான் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்து போரடிப்பீர்கள். இந்த வித்தியாசமான சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க!
சரி.. சரி இனி கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :-
கத்தரிக்காய் - 4
க்காளி - 2
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது.
செய்முறை:-
கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).
கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும்.
வாரம் இருமுறை ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்கறீங்கன்னு சொல்லுங்க...!


தயிர் உருளை !!!!

இன்று உருளைக்கிழங்கைக் கொண்டு ஒரு வித்தியாசமான தயிர் உருளை சைடிஷ் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - 2
சற்றே புளித்த தயிர் - அரை கப்
இஞ்சி + பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளுங்கள்.
பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.
அதனுடன், மிளகாய்த்தூள் + மஞ்சள்தூள் + மிளகுத்தூள் சேர்த்து வதக்குங்கள்.
பின்னர், உப்பு + உருளைக்கிளங்கு சேர்த்து சிறு தீயில் 10 நிமிடம் நன்கு வதக்குங்கள்.
அதன் பின்னர், தயிர் + கரம்மசாலா சேர்த்துக் சுருளக் கிளறி இறக்குங்கள்.
குறிப்பு :-
பூரி (அ) சப்பாத்தி (அ) பிரேட்க்கு சூப்பரான சைடிஷ் இந்த தயிர் உருளை.